"தவறான தகவல் தந்தால் நம்பிக்கை குறைந்து விடும்" - முதலமைச்சர் நாராயணசாமி மீது கிரண்பேடி பாய்ச்சல்
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வது தொடர்பாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி ஆய்வு கூட்டம் நடத்தினார்.
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வது தொடர்பாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி ஆய்வு கூட்டம் நடத்தினார். தூர்வாரும் பணியை ஏரி சங்கங்களுக்கு தருமாறு கிரண்பேடி தெரிவித்திருந்ததாக அந்த கூட்டத்தில் அவர் கூறினார். இதனை துணை நிலை ஆளுநர் கிரண்பேடி மறுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். நிதி தொடர்பான விஷயங்களில் ஆளுநர் அலுவலகத்திற்கு பொறுப்பு உண்டு என்றும் முதல்வர் தவறான தகவல்களை தரக்கூடாது என்றும் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் தவறான தகவல் தந்தால் அவர் மீதான நம்பிக்கை குறைந்து விடும் என்றும் கிரண்பேடி குறிப்பிட்டுள்ளார்
Next Story