"லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு தற்காலிக பாஸ்போர்ட்" - மத்திய அரசு
ஆயிரத்து 400 கோடி ரூபாய் முறைகேடு வழக்கில் சிக்கிய லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு தற்காலிக பாஸ்போர்ட் தான் வழங்க முடியும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தனது பாஸ்போர்ட்டை புதுப்பிக்க மறுத்ததை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் மார்ட்டின் தாக்கல் செய்த வழக்கு, நீதிபதி மகாதேவன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் சார்பில் ஆஜரான மத்திய அரசு வழக்கறிஞர் ரமேஷ், கேரளாவிலும் லாட்டரி ஊழல் தொடர்பாக மார்ட்டின் மீது சிபிஐ மற்றும் அமலாக்கப்பிரிவு வழக்குகள் உள்ளதாக கூறினார். அவசரமாக வெளிநாடு செல்ல விரும்பினால், எர்ணாகுளம் நீதிமன்றத்தில் விண்ணப்பித்தால், ஒரு ஆண்டுக்கு தற்காலிக பாஸ்போர்ட் வழங்கப்படும் என தெரிவித்தார். இதையடுத்து, வழக்கை 10ம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.
Next Story