பாலியல் புகார் குறித்து விசாரிக்க டி.ஜி.பி. அமைத்த குழுவை மாற்றியமைக்க கோரி மனு
காவல்துறையில் பெண் காவலர்கள், அதிகாரிகள் அளிக்கும் பாலியல் புகார்கள் குறித்து விசாரிக்க, கூடுதல் டி.ஜி.பி. சீமா அகர்வால் தலைமையில் ஒரு குழுவை அமைத்து கடந்த 17ஆம் தேதி டி.ஜி.பி. உத்தரவிட்டார்.
காவல்துறையில் பெண் காவலர்கள், அதிகாரிகள் அளிக்கும் பாலியல் புகார்கள் குறித்து விசாரிக்க, கூடுதல் டி.ஜி.பி. சீமா அகர்வால் தலைமையில் ஒரு குழுவை அமைத்து கடந்த 17ஆம் தேதி டி.ஜி.பி. உத்தரவிட்டார்.
இந்த குழு சட்டப்படி அமைக்கப்படவில்லை என கூறி, சென்னை சூளைமேட்டை சேர்ந்த வழக்கறிஞர் பிரேம் ஆனந்த், உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
பெண்கள் மற்றும் தொண்டு நிறுவனத்தை சேர்ந்த யாரும் உறுப்பினர்கள் இல்லாத நிலையில், உயர் அதிகாரிகளை பாதுகாக்கும் நோக்கில் இந்த குழு அமைக்கப்பட்டு உள்ளதாக மனுவில் கூறப்பட்டுள்ளது.
அனைத்து துறைகளிலும் இந்த குற்றங்களை விசாரிக்கும் குழுக்களை அமைக்க உள்துறை செயலாளர், டி.ஜி.பி. உள்ளிட்டோருக்கு உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அரசு மற்றும் தனியார் துறைகளில், பாலியல் புகார்கள் மற்றும் அவற்றின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய அரசு செயலர்கள் மற்றும் டி.ஜி.பி.க்கு உத்தரவிடவும் மனுவில் கோரப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி தஹில்ரமானி, நீதிபதி துரைசாமி அடங்கிய அமர்வு, மனு மீதான விசாரணையை வேறு அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது.
Next Story