ரபேல் விமான கொள்முதல் பற்றி ராகுலுக்கு என்ன தெரியும் ? - அருண் ஜெட்லி கேள்வி
ரபேல் விமான கொள்முதல் விவகாரத்தில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.
* ரபேல் விமானங்களை வாங்க 2007ஆம் ஆண்டு முடிவு செய்யப்பட்டதாகவும், இது தொடர்பாக பேசி வரும் ராகுல் காந்தி, 7 இடங்களில் 7 விதமான விலைகளை கூறியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
* ரபேல் விமான ஒப்பந்தம் தொடர்பான ராகுலின் வாதங்கள் அனைத்தும் மழலை பள்ளி அளவில் இருப்பதாக அருண் ஜெட்லி விமர்சித்துள்ளார். 2016ஆம் ஆண்டில் ஒப்பந்தம் செய்த நிலையில், விமானத்தின் அடிப்படை விலையில் 9 சதவீதம் அளவுக்கு குறைந்திருப்பது, ராகுல் காந்திக்கு தெரியுமா? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
* ரபேல் விமான கொள்முதல் பற்றி ராகுலுக்கு என்ன தெரியும் என்பதை கூற முடியுமா எனவும் அருண் ஜெட்லி கேள்வி எழுப்பியுள்ளார்.
* சாதாரண விமானத்தின் விலையையும், போர் தளவாடங்கள் நிரப்பப்பட்ட விமானத்தின் விலையையும் ஒப்பிட முடியுமா? எனவும் ராகுல் காந்திக்கு அருண் ஜெட்லி கேள்வி எழுப்பியுள்ளார்.
* ரபேல் விமான கொள்முதல் விவகாரத்தை எழுப்புவதற்கு, 10 ஆண்டுகள் காலதாமதம் ஏற்பட்டது ஏன் என்பதற்கான காரணமும் ராகுலிடம் இல்லை என ஜெட்லி கேள்வி விமர்சித்துள்ளார்.
* நாட்டின் பாதுகாப்பு விஷயத்தில் ராகுல் காந்தி சமரசம் செய்து கொண்டதாக கருதலாமா எனவும் அருண்ஜெட்லி, அடுக்கடுக்காக கேள்வி எழுப்பியுள்ளார்.
Next Story