நிவாரண முகாமில் இருந்த பெண்ணுக்கு திருமணம்..
கர்நாடகாவில் மழை, வெள்ளத்தில் உடைமைகளை இழந்து நிவாரண முகாமில் இருந்த பெண்ணுக்கு திருமணம் நடந்தது.
கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தை சேர்ந்த மஞ்சுளாவுக்கு கேரள மாநிலம் கண்ணூரை சேர்ந்த ராஜீஷ் என்பவருடன் 26ஆம் தேதி திருமணம் செய்ய ஏற்கனவே நிச்சயம் செய்யப்பட்டிருந்தது. இதற்கிடையே, மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் உடைமைகளை இழந்த மஞ்சுளா குடும்பத்தினர் நிவாரண முகாமில் தங்கியுள்ளனர். நகை, பணம் மற்றும் பொருட்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதால் திருமணம் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் திட்டமிட்டபடி மடிகேரியில் உள்ள ஓம்காரேஸ்வரா கோவிலில் மஞ்சுளா - ராஜீஷ் இருவரின் திருமணம் நடந்தது. நிவாரண முகாமில் இருந்த மக்கள், தன்னார்வ தொண்டு அமைப்பினர் என நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு புதுமண ஜோடியை வாழ்த்தினர்.
Next Story