வாக்கு சேகரிக்க சென்ற காங்கிரஸ் வேட்பாளருக்கு செருப்படி
கர்நாடகாவில் வாக்கு சேகரிக்கச் சென்ற காங்கிரஸ் வேட்பாளர், செருப்பால் அடித்து விரட்டப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவில் வாக்கு சேகரிக்கச் சென்ற காங்கிரஸ் வேட்பாளர், செருப்பால் அடித்து விரட்டப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவில் நாளை மறுதினம் உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. இந்நிலையில், கொப்பள் மாவட்டத்தில் உள்ள குஷ்டகி நகர சபையின் 20வது வார்டில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் தம்மண்ணா, அந்த வார்டுக்குட்பட்ட பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, ஏற்கனவே வெற்றி பெற்று மக்களை மோசம் செய்து விட்டதாகக் கூறி, அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண் ஒருவர், செருப்பால் அவரை அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செல்போனில் பதிவான இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
Next Story