மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இஸ்லாமிய மக்கள்: தங்குவதற்கு திறந்து விடப்பட்ட இந்து கோயில்
கேரளாவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் திருச்சூர் மாவட்டம் கொச்சுகாடாவூ அருகே உள்ள புரப்பள்ளிகாவூ ரத்தனேஸ்வரி கோயில் நிர்வாகம், இஸ்லாமிய பெருமக்கள் வந்து தங்க அனுமதித்தது.
கேரளாவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் திருச்சூர் மாவட்டம் கொச்சுகாடாவூ அருகே உள்ள புரப்பள்ளிகாவூ ரத்தனேஸ்வரி கோயில் நிர்வாகம், இஸ்லாமிய பெருமக்கள் வந்து தங்க அனுமதித்தது. இதுதவிர, கோயிலுக்கு சொந்தமான மண்டபம் இஸ்லாமிய பெருமக்கள் பக்ரீத் அன்று தொழுகை நடத்த ஏற்பாடு செய்துதரப்பட்டது.
இந்த சம்பவம் மத வேற்றுமைகளை களைந்து சமூக நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கியதாக பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். மழை வெள்ளம், பள்ளி வாசலை சூழ்ந்த நிலையில் இந்துக்கள் தங்களை தொழுகை நடத்த இடம் செய்து, இனிப்புகள் வழங்கி வரவேற்றது மறக்க முடியாத அனுபவம் என இஸ்லாமியர்கள் தெரிவித்துள்ளனர்.
Next Story