இந்தியாவில் பான் கார்டுகள் பயன்பாடு அதிகரிப்பு
இந்தியாவில் பான் அட்டை பயன்பாடு அதிகரித்துள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
* வருமான வரி செலுத்த பான் எனப்படும் நிரந்தர கணக்கு எண் பெற வேண்டும். இதற்காக வருமான வரித் துறையில் விண்ணப்பித்து பான் அட்டை பெறலாம்.
* பண நீக்க நடவடிக்கை, ஜி.எஸ்.டி வரி அறிமுகம்,மற்றும் கருப்பு பணத்திற்கு எதிராக கடுமையான தொடர் நடவடிக்கைகளின் விளைவாக வருமான வரி கட்டுபவர்கள் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது.
* கடந்த மார்ச் மாதம் முடிவடைந்த காலாண்டில் ஒரு கோடியே 96 லட்சம் பான் கார்டுகள் வழங்கியிருப்பதாக வருமான வரித்துறை தெரிவிக்கிறது.
* இதுவரை ஒட்டுமொத்தமாக 37 கோடியே 9 லட்சம் பான் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
* வங்கி கணக்குகள் மற்றும் ஆதார் எண்களை,பான் கார்டுகளுடன் இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
* இரண்டு லட்ச ரூபாய்க்கு மேல் தங்க நகை வாங்க பான் கார்டுகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
* பல்வேறு இதர வணிக பரிவர்த்தனைகளுக்கும் பான் கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் பான் கார்டுகள் பயன்பாடு அதிகரித்து வருகிறது...
Next Story