கேரள வெள்ள நிவாரணம் : ரூ. 2 கோடி மதிப்பிலான நிலத்தை தானமாக வழங்கிய மாணவி
கேரள வெள்ள நிவாரணத்திற்கு கண்ணூர் மாவட்டம் பையனூரை சேர்ந்த சங்கரன் என்பவரின் 16 வயது மகள் ஸ்வகா தனக்கு சொந்தமான 2 கோடி ரூபாய் மதிப்பிலான ஒரு ஏக்கர் நிலத்தை, தானமாக வழங்கியுள்ளார்.
கேரள வெள்ள நிவாரணத்திற்கு கண்ணூர் மாவட்டம் பையனூரை சேர்ந்த சங்கரன் என்பவரின் 16 வயது மகள் ஸ்வகா, தனக்கு சொந்தமான 2 கோடி ரூபாய் மதிப்பிலான ஒரு ஏக்கர் நிலத்தை, தானமாக வழங்கியுள்ளார். பிளஸ் - ஒன் படிக்கும் மாணவி ஸ்வகாவுக்கு பாராட்டு தெரிவித்த கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், கண்ணூர் மாவட்ட ஆட்சியரிடம் நிலத்தை ஒப்படைக்குமாறு, கேட்டுக்கொண்டார். 2 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை தானமாக வழங்கிய 16 வயது மாணவிக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
Next Story