மக்கள் பிரதமர் வாஜ்பாயின் சாதனைகள்: பொக்ரான் அணு ஆயுத சோதனை வெற்றி
முன்னாள் பிரதமர் வாஜ்பாய், இந்தியா ஒரு அணு ஆயுத நாடு என உலக அரங்குக்கு பிரகடனம் செய்து சாதனை முத்திரை பதித்தவர்.
முன்னாள் பிரதமர் வாஜ்பாய், இந்தியா ஒரு அணு ஆயுத நாடு என உலக அரங்குக்கு பிரகடனம் செய்து சாதனை முத்திரை பதித்தவர். கடந்த 1998 ம் ஆண்டு மே மாதம் 11 ம் தேதி, ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில், இந்தியா வெற்றிகரமாக அணு ஆயுத சோதனை நடத்தியது. இதன் மூலம் அணு ஆயுத நாடுகள் பட்டியலில், இந்தியாவும் இணைந்தது.
அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த வாஜ்பாய், இந்திய மக்களால், அப்போது பாராட்டு பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
லாகூருக்கு பேருந்து போக்குவரத்து துவக்கம்
இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை மூலம் நல்லுறவு ஏற்பட பல்வேறு முயற்சிகளை எடுத்தவர், வாஜ்பாய்.
1999 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19 - ம் தேதி, பாகிஸ்தானின் லாகூருக்கு பேருந்து போக்குவரத்தை வாஜ்பாய் துவக்கி வைத்தார். இந்த நிகழ்வு, தேசிய அரசியலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பதிவாக இடம் பெற்றுள்ளது.
Next Story