திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்
திருப்பதி ஏழுமலையான் கோயில் கும்பாபிஷேக விழா, வெகு விமரிசையாக நடைபெற்றது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் கும்பாபிஷேக நிகழ்வு இன்று விமரிசையாக நடைபெற்றது. இதற்கான பூஜைகள் கடந்த 11 ஆம் தேதி தொடங்கிய நிலையில் தொடர்ந்து யாகசாலை பூஜைகள், மகா சாந்தி அபிஷேகம் உள்ளிட்டவை நடைபெற்றது. இந்த நிலையில் இன்று காலை ஆகம விதிகளின் படி, கோபுர கலசத்தின் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. மூலவருக்கு நடந்த கும்பாபிஷேக நிகழ்வை தொடர்ந்து வரதராஜ பெருமாள், வகுளமாதேவி உள்ளிட்ட தெய்வங்களின் சன்னதிகளிலும் புனித நீர் ஊற்றப்பட்டது. அப்போது கோவிந்தா கோவிந்தா என பக்தர்கள் கோஷங்களை எழுப்பி கோபுர தரிசனம் செய்தனர்.
Next Story