கேரளாவில் வடிய துவங்கிய வெள்ள நீர்
கேரளாவில் கன மழை பெய்ததையடுத்து, 2 நாட்களுக்கு பிறகு கோத்தமங்கலம் பகுதியில், உள்ள மணிகண்டன்காலனி, வெள்ளாரங்குட்டி ஆதிவாசிகள் காலனியில் உள்ள 30 வீடுகளில் இருந்து வெள்ள நீர் வடிந்தது.
கேரளாவில் கன மழை பெய்ததையடுத்து, அங்குள்ள 27 அணைகளில் இருந்தும் நீர் திறக்கப்பட்டது. இதனால் கரையோரங்களில் உள்ள வீடுகளில் வெள்ள நீர் புகுந்தது. இந்நிலையில், 2 நாட்களுக்கு பிறகு, கோத்தமங்கலம் பகுதியில், உள்ள மணிகண்டன்காலனி, வெள்ளாரங்குட்டி ஆதிவாசிகள் காலனியில் உள்ள 30 வீடுகளில் இருந்து வெள்ள நீர் வடிந்தது.
இதனையடுத்து, வீடுகளில் தேங்கிய சகதியை, அகற்றும் பணியில் ஈடுபட்டனர். வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளான இப்பகுதியில் 300 குடும்பங்களுக்கு 3 டன் அரிசி மற்றும் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.
Next Story