கார்ப்பரேட் சமூக பொறுப்பு நிதி பற்றிய விவரங்கள்- மத்திய அமைச்சர் பியூஸ் கோயல்

நாடாளுமன்றத்தில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், கார்ப்பரேட் சமூக பொறுப்பு நிதி பற்றிய விவரங்களை தெரிவித்தார்.
கார்ப்பரேட் சமூக பொறுப்பு நிதி பற்றிய விவரங்கள்- மத்திய அமைச்சர் பியூஸ் கோயல்
x
நாடாளுமன்றத்தில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், கார்ப்பரேட் சமூக பொறுப்பு நிதி பற்றிய விவரங்களை தெரிவித்தார். ஆண்டுக்கு ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் விற்று முதல் செய்யும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களும், ஆண்டுக்கு 5 கோடி ரூபாய்க்கு மேல் லாபம் ஈட்டும் நிறுவனங்களும், நிகர லாபத்தில், 2 சதவீதத்தை சமூக காரியங்களுக்காக செலவு செய்ய வேண்டும் என்று கம்பெனி சட்டத்தில் உள்ளதாக தெரிவித்தார்.   
 
கடந்த 2016-17 நிதியாண்டில், 132 பொதுத்துறை நிறுவனங்கள் ஆயிரத்து 325 கோடியும்,  6 ஆயிரத்து 154 தனியார் நிறுவனங்கள் 3ஆயிரத்து 393 கோடி ரூபாயையும் இதற்காக செலவழித்துள்ளதாக அவர் தெரிவித்தார். 

தமிழகத்தை சேர்ந்த நிறுவனங்கள் 202 கோடி ரூபாய் செலவழித்துள்ளதாக கூறிய அவர் மருத்துவ உதவிகள், குடிநீர், சுகாதார வசதிகள், வறுமை ஒழிப்பு, ஊட்டச்சத்து குறைபாட்டை நீக்க நடவடிக்கை போன்ற திட்டங்களுக்காக 1201 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டதாக கூறினார். 

கல்வி, வேலை வாய்ப்புகள், மற்றும் மாற்று திறனாளிகள் நலன்களுக்காக ஆயிரத்து 605 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டதாகவும்,  ஊரக மேம்பாட்டு திட்டங்களுக்காக 628 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

சுற்றுச்சூழல், காட்டு விலங்குகள், இயற்கை வளங்கள் பாதுகாப்பு திட்டங்களுக்காக 306 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டதாக கூறிய அமைச்சர் பியூஸ் கோயல்,  கார்ப்பரேட் சமூக பொறுப்பு நிதி ஒதுக்காத 272 நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்