கேரளாவில் கொட்டி தீர்க்கும் கனமழை - வெள்ளத்தில் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

கேரளாவில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்திற்கு 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
கேரளாவில் கொட்டி தீர்க்கும் கனமழை - வெள்ளத்தில் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
x
நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி

கேரளாவில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்திற்கு 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.கேரளாவின் இடுக்கி, கண்ணூர், மலப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் குடியிருப்பு மற்றும் வணிக வளாகங்களில் வெள்ள நீர் புகுந்ததது. மழை, மற்றும் வெள்ளத்திற்கு 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மூணாறை அடுத்த அடிமாலியில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒரே  குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. மாயமான 5 பேரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

பாலக்காடு பகுதியில் வெள்ளம்

தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், கேரளாவில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அணைகள் வேகமாக நிரம்பி வரும் நிலையில், பாலக்காடு பகுதி முழுவதும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. சாலைகள் மற்றும் நீர் நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். 

கன்னூரில் இடிந்து விழுந்த வீடுகள் - கேரளாவுக்கு பேரிடர் மீட்பு படை விரைவு

கேரளாவில் கனமழை காரணமாக கன்னூர் பகுதியில் இரண்டு வீடுகள் இடிந்து விழுந்தன. வீடுகள் இடிந்து விழும் காட்சிகள் செல்போனில் படம் பிடிக்கப்பட்டு சமூக வலை தளங்களில் பரவி வருகின்றன.இதற்கிடையே, கேரளாவில் பல்வேறு இடங்களில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. மீட்பு பணிகளை மேற்கொள்ள தேசிய பேரிடர் மீட்பு படையினரும் கேரளா விரைந்துள்ளனர். 
 


Next Story

மேலும் செய்திகள்