இதர பிற்படுத்தப்பட்டோர் தேசிய ஆணையத்துக்கு அரசியல் சாசன அந்தஸ்து மக்களவையில் நிறைவேறியது

இதர பிற்படுத்தப்பட்டோர் தேசிய ஆணையத்துக்கு அரசியல் சாசன அந்தஸ்து வழங்க வகை செய்யும் மசோதா மக்களவையில் நிறைவேறியது.
இதர பிற்படுத்தப்பட்டோர் தேசிய ஆணையத்துக்கு அரசியல் சாசன அந்தஸ்து மக்களவையில் நிறைவேறியது
x
தேசிய ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின ஆணையங்களுக்கு உள்ளது போல, இதர பிற்படுத்தப்பட்டோர் தேசிய ஆணையத்துக்கு அரசியல் சாசன அந்தஸ்து வழங்கும் மசோதா 2017 மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது.  இந்த மசோதா  விவாதத்திற்கு பின்னர் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. அவையில் இருந்த 406 உறுப்பினர்களும் மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதனைத் தொடர்ந்து மசோதா நிறைவேறியதாக மக்களவைத் தலைவர் அறிவித்தார்.விரைவில் இந்த மசோதா மாநிலங்களவையில் அறிமுகம் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட உள்ளது. பிரதமர் மக்களுக்கு அளித்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டு உள்ளதாக பின்னர் செய்தியாளர்களிட​ம் பேசிய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்