ரெப்போ வட்டி விகிதம் 0.25% உயர்வு - ரிசர்வ் வங்கி அறிவிப்பு
ரெப்போ வட்டி விகிதம் 0.25% உயர்வு - ரிசர்வ் வங்கி அறிவிப்பு
மும்பையில் நடைபெற்ற ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேல், ரெப்போ வட்டி விகிதம் பூஜ்ஜியம் புள்ளி 25 சதவீதம் உயர்த்தப்படுவதாக தெரிவித்தார்.
இதன்மூலம், வங்கிகளுக்கான குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதம் 6 புள்ளி 25 சதவீதத்தில் இருந்து 6 புள்ளி 50 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், வீடு, வாகன கடனுக்கான வட்டி விகிதம் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.மேலும், 2018-2019 நடப்பு நிதியாண்டில், உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியான ஜி.டி.பி. 7 புள்ளி 4 சதவீதமாக இருக்கும் என ரிசர்வ் வங்கி கணித்துள்ளது.
Next Story