இன்று முழு சந்திர கிரகணம் : வெறும் கண்ணில் பார்க்கலாம் என விஞ்ஞானிகள் தகவல்

இன்று இரவு ஏற்படும் சந்திர கிரகணத்தை வெறும் கண்ணில் பார்க்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இன்று முழு சந்திர கிரகணம் : வெறும் கண்ணில் பார்க்கலாம் என விஞ்ஞானிகள் தகவல்
x
சூரியன், பூமி, சந்திரன் அனைத்தும் ஒரே நேர் கோட்டில் வரும்போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது. சந்திரன் மீது பூமியின் நிழல் விழுவதால், சந்திரன் பிரகாசம் குறைந்து, கருப்பாக காட்சியளிக்கும். இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய சந்திர கிரகணம் இன்று விண்ணில் தென்படுகிறது. இந்தியா, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, சவுதி அரேபியா, மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் இதனை காணலாம்.இந்தியாவில் இன்று இரவு 10.44 மணிக்கு தொடங்கி நள்ளிரவைத் தாண்டி நாளை அதிகாலை 3.50 வரை நீடிக்கும் இந்த பூரண சந்திர கிரகணத்தை, வெறும் கண்ணால் பார்க்கலாம் என, விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்