திருப்பதி ஏழுமலையான் கும்பாபிஷேக விழா : 6 நாட்களுக்கு வைகுண்டம் காத்திருப்பு வழியாக தரிசனம்
திருப்பதி ஏழுமலையான் கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி 6 நாட்கள் வைகுண்டம் காத்திருப்பு வழியாக பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலின் அறங்காவலர் குழு கூட்டம் திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய செயல் அலுவலர் அணில்குமார் சிங்கால், ஆகஸ்ட் 11ம் தேதி முதல் 16ம் தேதி வரை நடைபெற உள்ள கும்பாபிஷேக விழா தொடர்பாக பக்தர்களின் கருத்துக்கள் கேட்கப்பட்டதாக தெரிவித்தார். கும்பாபிஷேகம் நடைபெறும் 6 நாட்களுக்கு திருமலைக்கு வரும் பக்தர்கள் வைகுண்டம் காத்திருப்பு வழியாக தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என அவர் கூறினார். இந்த 6 நாட்களுக்கு விஐபி தரிசனம், அறங்காவலர் குழு தரிசனம், திவ்ய தரிசனம் உள்ளிட்டவை ரத்து செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
Next Story