பாறையை தட்டினால், மணியோசை - 2500 ஆண்டுகள் பழைமையான இசைப்பாறை
விலங்குகளில் இருந்து மக்களை காப்பாற்றும் பாறையை கிராம மக்கள் தெய்வமாக வழிபடுகிறார்கள்
* ஒசூர் அருகே மிலிதிக்கி என்ற மலைக்கிராமத்தில், உள்ள பாறை ஒன்றை தட்டினால், வெண்கல மணியோசை கேட்க முடிகிறது. அப்பகுதியை சுற்றியுள்ள கிராம மக்கள் ஆடு மாடு மேய்க்க வருகையில், அடிக்கடி வன விலங்குகளால் அச்சுறுத்தப்படும் நிகழ்வுகள் தொடர்கின்றன.
* அதுபோன்ற சமயங்களில், கிராம மக்கள் பாறையை தட்டி, ஒலி எழுப்பி எச்சரிக்கை செய்கின்றனர். பாறையிலிருந்து வரும் ஒலி, மற்றும் அதிர்வுகளால் வன விலங்களும், ஓடி விடுவதாக கிராம மக்கள் கூறுகின்றனர்.
* தங்களை பாதுகாக்கும் பாறையை இங்குள்ள மக்கள் தெய்வமாகவே வழிபட்டு வருகின்றனர். இப்பகுதியை சுற்றிலும் மேலும் பல அதிசய பாறைகள் இருப்பதாக கூறும் கிராம மக்கள்,அரசு முன்வந்து இங்கு ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றனர்.
Next Story