புல்லெட் ரயில் நிதி நிறுத்தம்..?
மும்பை, அகமதாபாத் இடையிலான புல்லட் ரயில் திட்டத்துக்கான நிதியுதவியை ஜப்பான் நிறுவனம் நிறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது
இந்தியாவின் முதல் புல்லட் ரயில் திட்டம் ஒரு லட்சத்து 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் குஜராத் மாநிலத்தின் அஹமதாபாத் நகருக்கும் மகாராஷ்டிர மாநில தலைநகர் மும்பைக்கும் இடையே அமைக்க திட்டமிடப்பட்டது.
இந்த திட்டத்துக்கு இருநாடுகளின் பிரதமர்கள் முன்னிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அடிக்கல் நாட்டப்பட்டது.
தேசிய அதிவேக ரயில் கழகம் லிமிடெட் செயல்படுத்தும் இந்த திட்டத்திற்கான மொத்த செலவில் 88 ஆயிரம் கோடி ரூபாயை ஜப்பான் நிறுவனமும், மீதமுள்ள 22 ஆயிரம் கோடி ரூபாயை குஜராத், மகாராஷ்டிர மாநில அரசுகள் வழங்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஜப்பான், குஜராத், மகாராஷ்டிரா அளிக்கும் இந்த நிதி தவணை முறையில் தான் அளிக்கப்படும் என திட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
ஜப்பானின் சார்பில் ஜிகா என்று அழைக்கப்படும் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் தான் நிதியைத் தேசிய அதிவேக ரயில் கழகத்துக்கு ஒதுக்குகிறது. இந்த 88 ஆயிரம் கோடி ரூபாயை 15 ஆண்டுக்குப் பின்னர் 50 ஆண்டுகளில் , 0.1 சதவீத வட்டி விகிதத்துடன் திருப்பிச் செலுத்தினால் போதுமானது.
முதல் கட்ட தவணையாக 125 கோடி ரூபாயை ஒதுக்கிய JICA நிறுவனம் தற்போது நிதியை நிறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மக்களின் தொடர் போராட்டம் மற்றும் திட்டத்தில் உள்ள பல்வேறு தடைகளும் நிதியுதவி நிறுத்தக் காரணம் என கூறப்படுகிறது.
Next Story