ஃபார்வர்ட் மெஸேஜ்களுக்கு புதிய கட்டுப்பாடு - வதந்திகளை தடுக்க வாட்ஸ் அப் அதிரடி

வாட்ஸ் அப்பில் பரப்பப்படும் பொய்யான தகவல்களை தவிர்க்க, இந்தியாவில் புதிய நடைமுறையை வாட்ஸ் அப் நிறுவனம் கொண்டு வந்துள்ளது.
ஃபார்வர்ட் மெஸேஜ்களுக்கு  புதிய கட்டுப்பாடு - வதந்திகளை தடுக்க வாட்ஸ் அப் அதிரடி
x
வதந்திகளை தடுக்க வாட்ஸ் அப் அதிரடி

வாட்ஸ் அப்பில் பரப்பப்படும் பொய்யான தகவல்களை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மத்திய அரசு கொடுத்த அழுத்தத்தின் காரணமாக புதிய வசதி ஒன்றை அறிமுகம் செய்துள்ளதாக வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் படி, ஒருவர் தனக்கு வரும் ஒரு FORWARD MESSAGEஐ 5 வாட்ஸ் அப் குழுக்களுக்கு மட்டுமே அனுப்ப முடியும். அதற்கு பின்னர், FORWARD செய்யும் OPTION மறைந்துவிடும் என்று தெரிவித்துள்ள வாட்ஸ் அப் நிறுவனம், சோதனை முயற்சியாக இந்த நடைமுறை இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்