காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு தொடர்ந்து எதிர்ப்பு : நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த கர்நாடக எம்.பிக்கள் முடிவு

காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு எதிராக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்துமாறு வலியுறுத்த கர்நாடக எம்.பி.க்கள் முடிவு செய்துள்ளனர்.
காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு தொடர்ந்து எதிர்ப்பு : நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த கர்நாடக எம்.பிக்கள் முடிவு
x
காவிரி மேலாண்மை ஆணையத்தை தொடக்கத்தில் இருந்தே எதிர்த்து வரும் கர்நாடக அரசு காவிரி மேலாண்மை ஆணையம் செயல்பாட்டுக்கு வந்த பின்னர் ஆணையம் வகுத்துள்ள வரையறைகளை மாற்றி அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தது. இதை ஏற்றுக்கொள்ளாததால் அடுத்த கட்ட நடவடிக்கைகளில் கர்நாடக அரசு தீவிரமாக களமிறங்கியுள்ளது. ஏற்கனவே, அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டி, உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய முடிவெடுக்கப்பட்டது. 

இந்நிலையில், நாளை தொடங்கும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில், காவிரி மேலாண்மை ஆணையம் தொடர்பாக விவாதம் நடத்த வலியுறுத்துவதற்கு கர்நாடக எம்.பிக்கள் திட்டமிட்டுள்ளனர்.

அதற்காக இன்று டெல்லி புறப்பட்டுச் செல்லும் கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி, நாளை மாலை கர்நாடக எம்பிக்களுடன் டெல்லியில் ஆலோசனை நடத்துகிறார். இந்தக் கூட்டத்தின் போது, காவிரி விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் எந்த மாதிரியான கேள்விகளை முன்வைப்பது என்பது குறித்து ஆலோசனை நடத்தப்படவுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்