இந்தியாவில் 92% மக்களிடம் ஆதார் உள்ளது, 35 லட்சம் பேர் மட்டுமே ஆதார் இல்லாமல் இருக்கின்றனர்
இந்தியாவில் ஆண்டுக்கு 2 கோடி குழந்தைகள் பிறப்பதாகவும், 92 சதவீத இந்தியர்கள் ஆதார் வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்தியாவின் மக்கள் தொகையில், குறைந்தபட்சம் 92 சதவித மக்களிடம் ஆதார் சென்றடைந்து விட்டதாக ஆதார் அமைப்பு தெரிவித்துள்ளது. 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, இந்தியாவில் 121.08 கோடி மக்கள் இருந்தனர். ஆனால் ஜூலை 15 வரை இந்தியாவில், 121.75 கோடி மக்கள் ஆதார் எண் பெற்றிருக்கின்றனர் என்றும் 12 கோடி குழந்தைகளுக்கு ஆதார் இல்லை என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.. ஏறக்குறைய 35 லட்சம் பேர் மட்டுமே ஆதார் இல்லாமல் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. இந்த ஆதார் எண்ணிகையை வைத்து, தற்போதைய நிலையில், இந்தியாவின் மக்கள் தொகை 133.5 கோடியாக இருக்கும் என்று ஆதார் அமைப்பு தெரிவித்துள்ளது.
Next Story