உயர்சாதியினர் எதிர்ப்பை மீறி நடந்த தலித் சமூக திருமண ஊர்வலம்
80 ஆண்டுக்கு பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது
உத்தரப்பிரதேச மாநில காஷ்கஞ்ச் அருகே உள்ள நிஷாம்பூர் கிராமத்தில், காவல்துறையினர் பாதுகாப்புடன் தலித் திருமண ஊர்வலம் நடைபெற்றுள்ளது. 80 ஆண்டுகளாக உயர்சாதியினரின் தடையால் இத்தகைய திருமண ஊர்வலங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது இந்த ஊர்வலம் நடைபெற்றது. திருமண ஊர்வலம் இதற்கு முன் நடந்திராத நிலையில், ஊர்வலத்தை நடத்தினால் விளைவுகளை சந்திக்க வேண்டிய நிலை வரும் என உயர்சாதியினர் மிரட்டிய போதும், காவல்துறையினர் பாதுகாப்பு அளித்ததால் அந்த மிரட்டலுக்கு அஞ்சவில்லை என திருமண வீட்டார் தெரிவித்தனர்.
Next Story