அடுத்த மாதம், திருப்பதி திருமலையில் கும்பாபிஷேகம்.9 நாட்கள் தரிசனம் ரத்து..பக்தர்களுக்கு தடை
திருமலையில் அடுத்த மாதம் கும்பாபிஷேகம் நடைபெறுவதால் குறிப்பிட்ட 9 நாட்கள் அனைத்துவிதமான தரிசனங்களும் ரத்து செய்யப்படுவதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோயில் கும்பாபிஷேகம் வரும் ஆகஸ்ட் மாதம் 12 ந்தேதி முதல் 16 ந்தேதி வரை நடைபெற உள்ளது. அப்போது அதிக அளவில் பூஜை நடத்தப்படும் என்பதால் அனைத்து விதமான தரிசனங்களும், ஆர்ஜித சேவைகளும் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக திருமலையில் செய்தியாளர்களிடம் பேசிய அறங்காவலர் குழுத்தலைவர் புட்டா சுதாகர், ஆகஸ்ட் மாதம் 9 ஆம் தேதி மாலை 6 மணி முதல் 17 ஆம் தேதி, காலை 6 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி கிடையாது என்றார். மேலும் திருமலைக்கு மலைப்பாதையில் நடந்து செல்வதற்கும், அனுமதியில்லை என்றும், திருப்பதி - திருமலைக்கு போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
Next Story