என்.எல்.சி.யில் டீசல் வழங்கியதில் முறைகேடு என புகார் -சென்னை உயர்நீதிமன்றம்

நெய்வேலி பழுப்பு நிலக்கரி ஒப்பந்த பணிகளை மேற்கொள்ள தனியார் நிறுவனத்திற்கு மானிய விலையில் டீசல் வழங்கியதில் நடந்த முறைகேடு குறித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க கோரிய மனுவுக்கு, மத்திய அரசு மற்றும் என்.எல்.சி பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
என்.எல்.சி.யில் டீசல் வழங்கியதில் முறைகேடு என புகார் -சென்னை உயர்நீதிமன்றம்
x
* சுரங்க பணிகளுக்கு மானிய விலையில் டீசல் வழங்கியதில் பல கோடி ரூபாய் அளவுக்கு என்.எல்.சி.க்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக என்.எல்.சி ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கம் சார்பில் மத்திய ஊழல் தடுப்பு ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டது.

* இந்த புகாரை விசாரித்த மத்திய ஊழல் தடுப்பு ஆணையம், மானிய விலையில் டீசல் வழங்கியதில் எந்த முறைகேடும் இல்லை எனக்கூறி புகாரை முடித்து வைத்தது.

* இதை எதிர்த்து என்.எல்.சி ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

* இந்த மனுவை விசாரித்த நீதிபதி ராஜா, மனுவுக்கு  3 வாரத்தில் பதிலளிக்க  மத்திய அரசு, சி.பி.ஐ., என்.எல்.சி. நிறுவனம் மற்றும் மத்திய ஊழல் தடுப்பு ஆணையத்துக்கு உத்தரவிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்