இந்தியா : உலகின் 6வது மிகப்பெரிய பொருளாதார நாடு
பொருளாதார வளர்ச்சியில் பிரான்ஸை பின்னுக்கு தள்ளிய இந்தியா
2017ம் ஆண்டில், நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை கணக்கில் கொண்டு, இந்த கணிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன் படி, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி பிரான்ஸை விட அதிகமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2017ம் ஆண்டில், இந்தியாவின் மொத்த உற்பத்தி 2.59 டிரில்லியன் டாலராக இருந்த நிலையில், பிரான்ஸின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2.58 டிரில்லியன் டாலராக இருந்துள்ளது. இதனால் பிரான்ஸை பின்னுக்கு தள்ளி, இந்தியா 6வது மிகப்பெரிய பொருளாதாரமாக உருவெடுத்துள்ளது என்று உலக வங்கி தெரிவித்துள்ளது. இந்த பட்டியலில் தொடர்ந்து முதலாவது இடத்தில் அமெரிக்காவும், இரண்டாவது இடத்தில் சீனாவும், மூன்றாவது இடத்தில் ஜப்பானும், நான்கவது இடத்தில் ஜெர்மெனியும் உள்ளன. 5வது இடத்தை பிரிட்டன் பிடித்துள்ள நிலையில், இந்தியா 6வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
Next Story