மாநிலங்களவையில் மேலும் 5 மொழிகளில் பேச அனுமதி - மத்திய அரசு

வரும் மழைக்காலக் கூட்டத் தொடரில் மாநிலங்களவையில் மேலும் 5 மொழிகளில் எம்.பிக்கள் பேச ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாநிலங்களவையில் மேலும் 5 மொழிகளில் பேச அனுமதி - மத்திய அரசு
x
மாநிலங்களவையில் மேலும் 5 மொழிகளில் பேச அனுமதி

இந்தியாவில் 22 அங்கீகரிக்கப்பட்ட மொழிகள் உள்ளன. ஏற்கனவே மாநிலங்களவையில் தமிழ், குஜராத்தி, இந்தி, கன்னடம், மலையாளம், தெலுங்கு, அசாமி, பெங்காலி, மராத்தி, பஞ்சாபி மற்றும் ஒரியா உள்ளிட்ட 17 மொழிகளை ஒரே நேரத்தில் மொழி பெயர்க்கும் வசதி உள்ளது. இந்நிலையில், வருகின்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் டோக்ரி, கொங்கணி, காஷ்மீரி, சாந்தலி, சிந்தி ஆகிய மொழிகளை ஒரே நேரத்தில் மொழி பெயர்க்க வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அங்கீகரிக்கப்பட்ட 22  மொழி பேசும் உறுப்பினர்களும் தாய் மொழியிலேயே பேச முடியும். அவை உடனுக்குடன் மொழி பெயர்க்கப்படும். இதனால் அந்த மொழி பேசும் உறுப்பினர்கள் பயன்பெறுவார்கள். 

Next Story

மேலும் செய்திகள்