உச்ச நீதிமன்றத்தில் வழக்குகளை ஒதுக்குவதில் தலைமை நீதிபதிக்கு உள்ள அதிகாரத்தில் மாற்றமில்லை - உச்ச நீதிமன்றம்

உச்ச நீதிமன்றத்தில் வழக்குகளை விசாரிக்க ஒதுக்கீடு செய்யும் பணி தலைமை நீதிபதியின் அதிகார வரம்பிற்கு உட்பட்டதாக இருந்து வருகிறது.
உச்ச நீதிமன்றத்தில் வழக்குகளை ஒதுக்குவதில் தலைமை நீதிபதிக்கு உள்ள அதிகாரத்தில் மாற்றமில்லை - உச்ச நீதிமன்றம்
x
* உச்ச நீதிமன்றத்தில் வழக்குகளை விசாரிக்க ஒதுக்கீடு செய்யும் பணி தலைமை நீதிபதியின் அதிகார வரம்பிற்கு உட்பட்டதாக இருந்து வருகிறது.   

* இந்நிலையில் முன்னாள் சட்ட அமைச்சரும், மூத்த வழக்கறிஞருமான சாந்தி பூஷண், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். 


* இதில் வழக்குகளை தலைமை நீதிபதி மட்டும் வழக்குகளை ஒதுக்கீடு செய்யும் நடைமுறையை ரத்து செய்து விட்டு, 


* 5 நீதிபதிகள் கொண்ட கொலிஜியம் ஒதுக்கீடு செய்யும் நடைமுறையை கொண்டு வர உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார். 


* இந்த வழக்கை  நீதிபதிகள் ஏ.கே. சிக்ரி, அசோக் பூஷண் அமர்வு விசாரித்து வந்தது. 

* இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள், உச்ச நீதிமன்ற நீதிபதிகளில் தலைமை நீதிபதி தான் முதன்மையானவர் என்றும், 

* வழக்குகளை விசாரிக்க ஒதுக்கீடு செய்யும் அவரது அதிகாரத்தில் மாற்றமில்லை எனவும் தெரிவித்துள்ளனர். 

* நீதிமன்ற பணிகள் மற்றும் வழக்கு நிர்வாகத்தை மேற்கொள்வது தலைமை நீதிபதியின் தார்மீக கடமை என்றும் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர். 



Next Story

மேலும் செய்திகள்