மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு : 41 விழுக்காடு இடங்கள் நிரம்பியுள்ளது
மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வின் முதல் மூன்று நாட்களில், அரசுக் கல்லூரிகளில் உள்ள 41 சதவீத எம்.பி.பி.எஸ் இடங்கள் நிரம்பியுள்ளன.
முதல் நாளில், அரசு மருத்துவக் கல்லுாரிகளில் உள்ள 38 எம்.பி.பி.எஸ்., இடங்களும், 2 பி.டி.எஸ்., இடங்களும் நிரம்பின.
* கலந்தாய்வின் இரண்டாவது நாளில் அரசு மருத்துவக் கல்லுாரிகளில் உள்ள 572 எம்.பி.பி.எஸ். இடங்களும், தனியார் கல்லுாரியில் இருந்த ஒரு எம்.பி.பி.எஸ்., இடம் என மொத்தம் 573 இடங்கள் நிரம்பின.
* மூன்றாம் நாளான நேற்று, 719 அரசு கல்லூரி இடங்களும், இ.எஸ்.ஐ., கல்லுாரியின் 29 இடங்களும், 59 தனியார் மருத்துவக் கல்லூரி இடங்கள் என மொத்தம் 807 இடங்களும் நிரம்பின.
* மொத்தமாக, மூன்று நாளும் சேர்த்து, எம்.பி.பி.எஸ்., படிப்பில் ஆயிரத்து 418 இடங்களும், பிடிஎஸ் படிப்பில் மூன்று இடங்களும் நிரம்பியுள்ளன.
* அரசு ஒதுக்கீட்டின் கீழ் 3 ஆயிரத்து 393 எம்.பி.பி.எஸ்., இடங்கள் உள்ள நிலையில், மூன்றே நாளில் 41 விழுக்காடு இடங்கள் நிரம்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story