வேகமாக பரவிவரும் தவறான வதந்திகள் - வாட்ஸ் அப்பிற்கு மத்திய அமைச்சகம் எச்சரிக்கை
தவறான வதந்திகளை வேகமாக பரப்புவதற்கு வாட்ஸ் அப் பயன்பாடே காரணம் என மத்திய அரசு குற்றம் சாட்டியுள்ளது.
சமீப காலமாக குழந்தை கடத்தல் கும்பல் என்ற வதந்தியை நம்பி, அப்பாவி மக்கள் கொல்லப்படும் சம்பவம் அதிகரித்து வருவதாகவும், இது போன்ற தவறான தகவல்கள் பொறுப்பற்ற முறையில் வாட்ஸ் அப் மூலம் பரவுவதாகவும் மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழிட்நுட்ப அமைச்சகம் தெரிவித்துள்ளது.தவறான தகவல்கள் பரப்பப்படுவதை வாட்ஸ் அப் அனுமதிக்க கூடாது என்றும், இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. வதந்தியால் அப்பாவி மக்கள் கொல்லப்படும் விவகாரத்தை கடுமையாக அணுகுவதாக வாட்ஸ் அப் நிறுவனத்தை மத்திய அரசு எச்சரித்துள்ளது.
Next Story