14வது வயதில் 237 கிலோ எடையை தொட்ட சிறுவன்

உலகிலேயே அதிக உடல் பருமன் கொண்டவராக கருதப்பட்ட சிறுவன்
14வது வயதில் 237 கிலோ எடையை தொட்ட சிறுவன்
x
கடந்த 2003ஆம் ஆண்டு நவம்பரில், சுமார் இரண்டரை கிலோ எடையில் பிறந்த மிஹர், தமது 5வது வயதில் சுமார் 70 கிலோ வரை எடை அதிகரித்த தாக, அவரது தாய் பூஜா தெரிவித்தார். இந்த குடும்பத்தினர் பெரும்பாலும், உடல் பருமன் கொண்டவர்கள் என்பதால், மிஹரின் உடல் எடை குறித்துப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால், நாளாக நாளாக, மிஹரின் அபரிமிதமான வளர்ச்சி, பெற்றோருக்கு கலக்கத்தை ஏற்படுத்தியது. துரித உணவுகள் மீது தீராத காதல் கொண்ட மிஹர், பாஸ்தாவை கொரிப்பதிலும், பீட்சாவை ஒரு கை பார்ப்பதிலும், சளைத்தவரல்ல.இந்நிலையில் தான், மிஹரின் உடல் எடை சுமார் 237 கிலோவைத் தொட்டது. தமது 14வது வயதில், 237 கிலோவைத் தொட்ட மிஹர், உலகிலேயே இளவயதில் அதிக உடல் பருமன் கொண்டவர் என்று அழைக்கப்பட்டார். 

2010ம் ஆண்டிலேயே உடல் பருமன் குறைப்பு சிகிச்சைக்காக, இவரது பெற்றோர், மருத்துவர்களை அணுகினர். தொடக்கத்தில், கடுமையான உணவுக் கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க வலியுறுத்திய மருத்துவர்கள், தொடர்ந்து சிகிச்சையளிக்க தொடங்கினர். 2 நிமிடங்கள் கூட நிற்க முடியாக மிஹர், தொடர்ந்து படுத்த நிலையிலேயே இருக்க வேண்டிய தாயிற்று.தற்போது, அடுத்தடுத்த தொடர் சிகிச்சைகளால், சுமார் 100 கிலோ வரை எடை குறைக்கப்பட்டுள்ளது. மிஹரின் தற்போதைய எடை, 177 கிலோவாக குறைந்துள்ளது.உடல் எடை குறைப்பு அறுவை சிகிச்சை மேற்கொண்ட டெல்லி மருத்துவர் Pradeep Chowbey, முதன் முறையாக மிஹரை பார்த்த போது, உடல் எடைக் குறைப்பு சிகிச்சை வெற்றிகரமாக அமையும் என எதிர்பார்த்ததாக, நம்பிக்கை தெரிவித்தார்.அந்த நம்பிக்கை வெற்றி பெற்றுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்