உயர்கல்வி ஆணையம் - சீர் திருத்தம் அல்ல, சீரழிவு - பா.ம.க இளைஞரணி தலைவர் அன்புமணி
உயர்கல்வி ஆணையம் அமைப்பது சீர் திருத்தம் அல்ல, சீரழிவு தான் என பா.ம.க இளைஞரணி தலைவர் அன்புமணி விமர்சித்துள்ளார்.
உயர்கல்வி ஆணையம் அமைப்பது சீர் திருத்தம் அல்ல, சீரழிவு தான் என பா.ம.க இளைஞரணி தலைவர் அன்புமணி விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த ஆணையத்திற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் மூலமாக, மத்திய அரசு சமஸ்கிருதம், இந்தி திணிப்பு முயற்சிகளில் ஈடுபட முயலும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். கல்வி நிறுவனங்களின் அதிகாரங்களை ரத்து செய்யும் அதிகாரமும் இந்த ஆணையத்திற்கு வழங்கப்பட்டிருப்பதால், எதிர்ப்பு தெரிவிக்க முடியாத நிலை ஏற்படும் என தெரிவித்துள்ள அன்புமணி, இதன் ஆபத்தை உணர்ந்து அனைத்து கட்சிகளும் எதிர்குரல் எழுப்ப வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Next Story