இந்தியாவில் எத்தனை மொழிகள் பேசப்படுகிறது?
இந்தியாவில் 19 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட மொழிகள் மற்றும் பேச்சு வழக்கு மொழிகள், தாய் மொழியாக பேசப்பட்டு வருவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
கடந்த 2011ம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொழிவாரியான ஆய்வு குறித்த தகவலை மக்கள் தொகை ஆணையர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.
இதில், 121 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில், 10 ஆயிரம் அல்லது அதற்கு மேற்பட்டவர்களால், 121 மொழிகள் அதிகளவில் பேசப்படுகிறது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 8வது அட்டவணையின் இந்த 121 மொழிகள் இரண்டாக பிரிக்கப்படுகிறது. இதில் 22 மொழிகள் அட்டவணையிடபட்டுள்ளன. அங்கீகரிக்கப்படாத 99 மொழிகள் உள்ளன.
2011ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, இந்தியா முழுவதும் 19 ஆயிரத்து 569 தாய் மொழிகள் பேசப்படுகிறது என தெரிய வந்துள்ளது. மொத்த மக்கள் தொகையில், 96 புள்ளி 71 சதவீதம் பேர் அட்டவணையிடப்பட்ட 22 மொழிகளில் ஒன்றை தாய்மொழியாக கொண்டுள்ளனர். மீதமுள்ள 3 புள்ளி 29 சதவீதம் பேர், பிற மொழி பேசுபவராக உள்ளனர்.
அனைத்திந்திய அளவில் மொத்தம் 270 மொழிகள் அடையாளம் காணக்கூடிய, தாய்மொழிகளாக உள்ளன. இவற்றில் 123 மொழிகள் அட்டவணையிடப்பட்ட பிரிவில் வருகின்றன. மீதமுள்ள 147 மொழிகள் அட்டவணையிடப் படாத பிரிவில் உள்ளன.
Next Story