நீரவ் மோடி உட்பட 3 பேருக்கு எதிராக...ரெட் கார்னர் நோட்டீஸ் - சர்வதேச போலீஸ் பிறப்பித்தது
பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடன் பெற்று, மோசடி செய்த வழக்கில், வெளிநாட்டில் பதுங்கியுள்ள நீரவ் மோடி உட்பட 3 பேருக்கு, சர்வதேச போலீஸ் ரெட்கார்னர் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது
பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடன் பெற்று, மோசடி செய்த வழக்கில், வெளிநாட்டில் பதுங்கியுள்ள நீரவ் மோடி உட்பட 3 பேருக்கு, சர்வதேச போலீஸ் ரெட்கார்னர் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. பிரபல வைர வியாபாரியான நீரவ் மோடி, வங்கிகளில் 12 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி செய்ததாக, சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்நிலையில், வெளிநாட்டிற்கு தப்பிச்சென்ற அவரைப் பிடிக்க சி.பி.ஐ முயற்சி செய்து வருகிறது.
இந்நிலையில், அவரை கைது செய்ய சர்வதேச போலீஸ் உதவியை இந்தியா நாடியது. இதையடுத்து, அவருக்கு ரெட்கார்னர் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இதேபோல், நீரவ் மோடியின் சகோதரர் நிஷால் மோடி,
சுபாஷ் பராப் ஆகியோருக்கும் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Next Story