11 ஆண்டுகளாக பயன்பாட்டிற்கு வராத செண்பக தோப்பு அணை - மதகுகளை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

11 ஆண்டுகளாக பயன்பாட்டிற்கு வராத செண்பக தோப்பு அணை - மதகுகளை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
11 ஆண்டுகளாக பயன்பாட்டிற்கு வராத செண்பக தோப்பு அணை - மதகுகளை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
x
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் ஜவ்வாது மலை அடிவாரத்தில் உலக வங்கி மற்றும் நபார்ட்டு வங்கி இணைந்து சுமார் 34 கோடி ரூபாய் மதிப்பில் செண்பக தோப்பு அணை கடந்த 2007 ல் கட்டப்பட்டது..

பணிகள் முடிவடைந்து அணை திறக்கப்படும் நிலையில் அணையின் 7 இரும்பு ஷட்டர்கள் பழுதடைந்து மூடமுடியாத நிலை ஏற்பட்டதால் அணை பயன்பாட்டிற்க்கு வர முடியாத நிலை ஏற்பட்டது. கடந்த 11 ஆண்டுகளாக அணையின் மதகுகளை சீர் செய்ய நடவடிக்கை எடுக்காததால் 46க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள ஏரிகளில் தண்ணீர் இல்லாமல்  விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக  பொதுமக்கள் கூறி வருகின்றனர். ஆனால், தற்போதைய கலசம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் அணையை சீரமைக்க உள்ளதாக கூறுகிறார்.

அணை எப்போது விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் பயன்பாட்டிற்க்கு வரும் என்பதே பொதுமக்களில் கேள்வியாக உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்