இணையதளம் மூலம் பழைய கார் விற்பனையில் மோசடி, திருப்பத்தூரில் இருந்து சென்னை வந்தவர் ஏமாற்றம்

பழைய பொருட்களை விற்பனை செய்யும் இணைய தளத்தில் கார் வாங்க முயற்சித்தவரிடம் ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மோசடி நடந்துள்ளது
இணையதளம் மூலம் பழைய கார் விற்பனையில் மோசடி, திருப்பத்தூரில் இருந்து சென்னை வந்தவர் ஏமாற்றம்
x
திருப்பத்தூரை சேர்ந்த நகைக்கடை அதிபரான நவாஸ் அகமது, பழைய பொருட்கள் விற்பனை செய்யும் இணையதளம் மூலமாக கார் வாங்க முடிவு செய்தபோது, இணையதளத்தில் இன்னோவா கார் ஒன்று 14 லட்ச ரூபாய்க்கு இருப்பதை பார்த்துள்ளார். இதையடுத்து, முகவரியில் குறிப்பிட்டிருந்த சென்னையை சேர்ந்த சையது என்பவரை நவாஸ் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது, சையது தனது ஆதார் உள்ளிட்ட சில ஆவணங்களை வாட்ஸ்அப்பில் அனுப்பி நவாஸை நம்ப வைத்துள்ளார். 
இதையடுத்து, முன்பணமாக 30 ஆயிரம் ரூபாயை நவாஸ் அனுப்பியுள்ளார். பின்னர், கடந்த செவ்வாய் கிழமை சென்னை வந்த நவாஸை, எம்.ஆர்.சி நகரில் உள்ள ஒரு ஓட்டலில் சையது சந்தித்து காரை காண்பித்துள்ளார். பின்னர், சில ஆவணங்களில் கையெழுத்து பெற்றதோடு, ஒன்றரை லட்ச ரூபாய் பணத்தையும் நவாசிடம் இருந்து சையது வாங்கியுள்ளார். பின்னர், சில பாகங்களை போட வேண்டும் என கூறி காரை எடுத்துச் சென்ற சையது, அதன்பிறகு தலைமறைவாகி விட்டார்.  இது குறித்து நவாஸ் அளித்த புகாரின் பேரில், சென்னை பட்டினம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 



Next Story

மேலும் செய்திகள்