கரித்தூள் தயாரிப்பு பணியில் புதுக்கோட்டை நகராட்சி - விவசாயிகளுக்கு விற்பனை செய்ய திட்டம்
நாளொன்றுக்கு 2 டன்கள் அங்கக கரித்தூள் தயாரிப்பு : உரமாக பயன்படுத்தலாம் - கோவை வேளாண் பல்கலைக் கழகம்
மண்வளத்தை பெருக்கும் வகையில் புதுக்கோட்டை நகராட்சி, கரித்தூள் தயாரிக்கும் பணியில் தற்போது ஈடுபட்டு வருகிறது. சந்தையில் வீணாகும் வாழை, தேங்காய் மற்றும் பனை மட்டைகளை கொண்டு கரித்தூள் நாளொன்றுக்கு 2 டன்கள் வீதம் தயாரிக்கப்பட்டு வருகிறது. தொன்று தொட்டு பின்பற்றப்படும் முறையில் கரித்தூள் தயாரிப்பதை ஆய்வு செய்த கோவை வேளாண் பல்கலைக் கழகம், விவசாயிகள் இதனை உரமாக பயன்படுத்தலாம் என தெரிவித்து, அதற்கான சான்றிதழையும் வழங்கி உள்ளது. இந்த அங்கக கரித்தூளை குறைந்த விலையில் விவசாயிகளுக்கு விற்பனை செய்ய உள்ளதாக நகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Next Story