சேலம் - சென்னை பசுமை வழிச்சாலை திட்டத்தை எதிர்த்த வழக்கு : மத்திய அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
சேலம் - சென்னை பசுமை வழிச்சாலை திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசு பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சேலம் - சென்னை பசுமை வழிச்சாலை திட்டத்தை எதிர்த்த வழக்கு : மத்திய அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
சேலம் - சென்னை பசுமை வழிச்சாலை திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசு பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
8 வழிச்சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக கடந்த 11 ம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆட்சேபம் தெரிவிக்க 21 நாட்கள் அவகாசம் இருந்த போதிலும் நிலம் கையகப்படுத்தும் பணிகளை அரசு துவங்கிவிட்டதாக கூறி பூவுலகின் நண்பர்கள் அமைப்பை சேர்ந்த சுந்தர்ராஜன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் சிவஞானம், சேஷசாயி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நியாயமான இழப்பீடு பெறும் உரிமை, மறு வாழ்வு, மறு குடியமர்வு சட்டப்பிரிவு 105 ன் படி நெடுஞ்சாலை உள்ளிட்ட பொது பயன்பாட்டிற்காக நிலம் கையகப்படுத்தும் போது சமூக பாதிப்பு குறித்த ஆய்வு மற்றும் பொதுமக்கள் கருத்து கேட்பு நடைமுறைகள் பின்பற்றுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்றும் இந்த சட்டப்பரிவை செல்லாது என அறிவிக்க வேண்டும் என மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.
ஆனால் இந்த சட்டத்தின் கீழ் கையகப்படுத்தப்படும் நில உரிமையாளர்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளதாகக் கூறி, உத்தரவு நகலை மத்திய அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் தாக்கல் செய்தார். மேலும் இந்த வழக்கை தாக்கல் செய்ய மனுதாரருக்கு எந்த அடிப்படை உரிமையும் இல்லை எனவும் மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.
நில உரிமையாளர்களுக்கு நிலத்தின் சந்தை மதிப்பை விட 3 முதல் 4 மடங்கு கூடுதல் இழப்பீடு வழங்கப்படுவதாக தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் கூறினார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் மனுவுக்கு ஜூலை 12 ம் தேதிக்குள் பதில் அளிக்கும் படி மத்திய அரசுக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.
Next Story