எம்.பி.பி.எஸ்., அரசு இடங்களை அறிவிப்பதில் குளறுபடியா?
முதலில் 3355...பிறகு 3328....தற்போது 3393....இதில் எது சரி?
எம்.பி.பி.எஸ்., அரசு இடங்களை அறிவிப்பதில் குளறுபடியா?
மருத்துவ படிப்பிற்கான இடங்களை அறிவிப்பதில் ஒவ்வொரு ஆண்டும் குளறுபடியும், குழப்பங்களும் ஏற்படுகின்றன. அவ்வப்போது, எண்ணிக்கை மாறிக்கொண்டே இருக்கிறது.
* கடந்த 19ஆம் தேதியன்று, எம்பிபிஎஸ் படிப்பில் அரசு ஒதுக்கீடு 2 ஆயிரத்து 445 எனவும், ராஜா முத்தையா கல்லூரியில் 127 மற்றும் தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் 783 எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர். அதன்படி அரசு ஒதுக்கீட்டில் மொத்த எம்.பி.பி.எஸ்., இடங்கள் 3 ஆயிரத்து 355 என தெரிவிக்கப்பட்டது.
* இன்று தரவரிசை பட்டியல் வெளியிடுவதற்கு முன் கொடுத்த தகவலில், அரசு ஒதுக்கீடு 2 ஆயிரத்து 447 என்றும் ராஜா முத்தையா கல்லுாரியில் 127 மற்றும் கே.கே.நகர் இ.எஸ்.ஐ. கல்லுாரியில் 65 இடங்கள் தனியார் கல்லுாரியில் அரசு ஒதுக்கீடு 689 இடங்கள் என கூறப்பட்டது. இதன்படி மொத்த இடங்கள் 3 ஆயிரத்து 328 இடங்கள் என தெரிவிக்கப்பட்டது.
* ஆனால், தர வரிசை பட்டியலை வெளியிட்ட அமைச்சர் விஜயபாஸ்கர் அரசு ஒதுக்கீட்டில் எம்.பி.பி.எஸ்., இடங்கள் மொத்தம் 3 ஆயிரத்து 393 எனவும் அறிவித்தார்.
* முதலில் சொன்ன 3 ஆயிரத்து 355 இடங்கள் சரியா அதன் பிறகு சொல்லப்பட்ட 3 ஆயிரத்து 328 இடங்கள் சரியா இல்லை அமைச்சர் அறிவித்த 3 ஆயிரத்து 393 இடங்கள் என்பது சரியா என தெரியாமல் மாணவர்களும், பெற்றோரும் குழப்பமடைந்துள்ளனர்.
Next Story