வைகை அணையில் இருந்து 10 ஆண்டுகளுக்கு பிறகு பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு
கடந்த 2008ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது, அதன் பிறகு தற்போது தான் அணை திறக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ், தேனி மாவட்ட பொறுப்பு ஆட்சியர் கந்தசாமி ஆகிய இருவரும் பொத்தானை அமுக்கி மதகுகளை திறந்தனர். வைகை அணையில் இருந்து அடுத்த 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி முதல் 45 நாட்களுக்கு வினாடிக்கு 900 கனஅடி வீதமும், மீதமுள்ள 75 நாட்களுக்கு முறைப்பாசனம் மூலமும் நீர் திறக்கப்படும். கடந்த 2008ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது, அதன் பிறகு தற்போது தான் அணை திறக்கப்பட்டுள்ளது.
Next Story