"சொத்து வரியை கட்டத் தவறினால் வட்டி வசூலிக்கப்படும்"

சொத்துவரி கட்டாதவர்களிடம், வட்டி வசூல் செய்யும் சட்ட திருத்த மசோதாவை, உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி, சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.
சொத்து வரியை கட்டத் தவறினால் வட்டி வசூலிக்கப்படும்
x
இதன் படி,  1919 ம் ஆண்டு சென்னை மாநகராட்சி சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதற்கான மசோதவை, சட்டப்பேரவையில், உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி இன்று தாக்கல் செய்தார்.  அதன்படி, சொத்து வரியை கால தாமதமாக செலுத்துவோருக்கு வட்டி விதிக்கப்பட உள்ளது.  

சொத்துவரியை கால தாமதமாக செலுத்துவோருக்கு 2 சதவீதம் வட்டி விதிக்கப்படும் எனவும், சரியான நேரத்தில் வரி செலுத்துவோருக்கு 5 சதவீதம் அல்லது 5,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் எனவும் சட்டதிருத்த மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சட்ட திருத்த மசோதா, பேரவை கூட்டத்தொடரின் கடைசி நாளன்று விவாததித்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, குரல் ஓட்டெடுப்பு மூலம் நிறைவேற்றப்படும்.

Next Story

மேலும் செய்திகள்