"இனி புத்தகத்தை பார்த்தே தேர்வு எழுதலாம்..." - கர்நாடகாவின் புதிய கல்வி அமைச்சரின் பேச்சால் சர்ச்சை
வரும் காலங்களில் மாணவர்கள் புத்தகங்களை பார்த்தே தேர்வு எழுதும் முறை கொண்டுவரப்படும் என கர்நாடகாவின் புதிய கல்வி அமைச்சர் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணி அமைந்ததை தொடர்ந்து, தொடக்க கல்வி அமைச்சராக பகுஜன் சமாஜ் கட்சியின் மகேஷ் பொறுப்பேற்றுள்ளார். சாம்ராஜ்நகரில் நடந்த மாணவர்களுக்கான நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய அவர், பல துறைகளை சேர்ந்தவர்கள் புத்தகங்களை பார்த்து குறிப்பெடுக்கும் போது, மாணவர்கள் மட்டும் ஏன் புத்தகத்தை பார்க்காமல் தேர்வு எழுத வேண்டும் என கேள்வி எழுப்பினார். விரைவில, தொடக்க மற்றும் இடைநிலை கல்வி பயிலும் மாணவர்கள் புத்தகங்களை பார்த்து தேர்வு எழுதும் முறை கொண்டுவரப்படும் என அவர் தெரிவித்தார். இதுகுறித்து கல்வி நிபுணர்கள், மனோதத்துவ நிபுணர்களிடம் ஆலோசனை பெற்றுவருவதாக அமைச்சர், மாணவர்கள் மத்தியில் பேச, மாணவர்கள் குதூகலமாகினர். ஆனால், கல்வியாளர்கள் மத்தியில் அமைச்சரின் பேச்சுக்கு கடும் விமர்சனங்கள் எழுந்து வருகிறது.
Next Story