ரொக்கத்திற்கு பதிலாக மரக்கன்றுகளை வரதட்சணையாக பெற்ற மருமகன்

ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பள்ளி ஆசிரியர் ஒருவர் பணம், நகைக்கு பதிலாக 1001 மரக்கன்றுகளை மணமகளின் தந்தையிடம் வரதட்சணையாக கேட்டுப் பெற்றுள்ளார்.
ரொக்கத்திற்கு பதிலாக மரக்கன்றுகளை வரதட்சணையாக பெற்ற மருமகன்
x
திருமணத்தின்போது மணப்பெண் வீட்டாரிடம் பணம், நகை மற்றும் வாகனம் போன்றவற்றை மணமகன் குடும்பத்தினர் வரதட்சணையாக கேட்டு பெறுவது வழக்கம். ஆனால் இதற்கு விதிவிலக்காக ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பள்ளி ஆசிரியர் ஒருவர் பணம், நகைக்கு பதிலாக 1001 மரக்கன்றுகளை மணமகளின் தந்தையிடம் வரதட்சணையாக கேட்டுப் பெற்றார். சரோஜ் காந்த் பிஸ்வால் என்ற இளைஞர் ஒடிசா மாநிலம் கேந்திரபாரா பகுதியில் உள்ள பாலா பகதர்பூர் கிராமத்தை சேர்ந்தவர்.இவர் மணப்பெண்ணின் தந்தையிடம் தனக்கு வரதட்சணையாக பணம், நகை வேண்டாம். திருமணத்தின் போது ஆடம்பரமாக பூ அலங்காரம், பந்தல் அலங்காரம் தேவையில்லை, அதற்கு பதிலாக 1001 மரக்கன்றுகளை தாருங்கள் என கேட்டுள்ளார். இதனை ஏற்ற மணமகளின் தந்தை மாப்பிள்ளை கூறியதை போல் வரதட்சனையாக 1001 மரக்கன்றுகளை வரதட்சனையாக வழங்கினார்.

Next Story

மேலும் செய்திகள்