நாமக்கல்: தாய்பால் வங்கி, நோய் தணிப்பு சிகிச்சை மையம் துவக்கம்
தாய்பால் வங்கி, நோய் தணிப்பு சிகிச்சை மையம் துவக்கம் - ரூ.6 கோடி செலவில் புதிய வசதிகள்..
நாமக்கல் மாவட்ட அரசு மருத்துவமனையில் தாய்ப்பால் வங்கி, கணினி நுண்கதிர் மற்றும் நோய் தணிப்பு ஆதரவு சிகிச்சை மையம் தொடங்கப்பட்டது. விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் தலைமை தாங்கினார். விழாவில் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.சுமார் 6 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்த வசதிகளால் பெண்கள் மற்றும் குழந்தைகள் பெரிதும் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story