சமூக ஊடகங்களை கண்காணிக்க புதிய அமைப்பு - வதந்தி பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை

டிவிட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் பரவும் கருத்துகளை கண்காணிக்க, மத்திய அரசு ஒரு புதிய கண்காணிப்பு மையத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளது.
சமூக ஊடகங்களை கண்காணிக்க புதிய அமைப்பு - வதந்தி பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை
x
சமூக வலைத்தளங்கள் மனித வாழ்வில் இன்றியமையாத ஒன்றாகி விட்டது. இதனால், இதனை கண்காணிக்க மத்திய அரசு முடிவு செய்து அதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 

அதன் படி,  வருடத்தின் 365 நாட்களும், தினமும் 24 மணி நேரமும் இயங்கும் 'சமூக ஊடக கண்காணிப்பு கேந்திரத்தை' உருவாக்க, மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம், தனியார் நிறுவனங்களுக்கு டெண்டர் வெளியிட்டுள்ளது,  

இதன் படி, டெல்லியில் 20 பேரை கொண்ட, தலைமையகம் அமைக்கப்பட உள்ளது.  

இந்தியாவில் உள்ள 716 மாவட்டங்களிலும், மாவட்டத்திற்கு ஒரு ஆப்ரேட்டர் என்ற விதத்தில் உறுப்பினர்கள் நியமிக்கப்பட உள்ளனர். 

இந்த உறுப்பினர்கள், ஒரு பகுதியில் மிக அதிகம் பேசப்படும் விவகாரம் குறித்த , தகவல்களையும் அதன் தாக்கங்களையும் சேகரித்து, அறிக்கைகளாக்க திட்டமிட்டுள்ளது. 

சமூக வலைதளங்களில் பொய்யான செய்திகள் வெளியானால், அவற்றையும் உடனடியாக கண்டுபிடித்து அரசுக்கு இந்த ஆப்ரேட்டர்கள், தெரிவிப்பார்கள். 

பொய் செய்திகள், வதந்திகளை பரப்பவர்கள் மீது ஐ.பி.சி 153 மற்றும் 295ஆம் பிரிவிகளின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. 

இதன் படி, வாட்ஸப் மூலம் கலவரங்களை தூண்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும்.

Next Story

மேலும் செய்திகள்