இந்தியாவில் எத்தனை கோடீஸ்வரர்கள் இருக்கிறார்கள்..? அவர்களின் சொத்து மதிப்பு என்ன..?
இந்தியாவில் எத்தனை கோடீஸ்வரர்கள் இருக்கிறார்கள், அவர்களின் சொத்து மதிப்பு என்ன என்பதை தற்போது பார்க்கலாம்
இந்தியாவில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 20 சதவீதம் அதிகரித்துள்ளதாக கேப் ஜெமினி என்ற பிரான்ஸ் நிறுவனம் ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது
இதன்படி, 2017ல் இந்திய கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 2.63 லட்சமாக அதிகரித்துள்ளது. இது 2016 ஆண்டை காட்டிலும் 20. 3 சதவீதம் அதிகம். பணக்காரர்கள் என்றால், குறைந்தபட்சம் 6.8 கோடி சொத்து உடையவர்கள் மட்டுமே இந்த கணக்கில் வருகின்றனர்.
சரி மொத்தம் உள்ள 2.63 லட்சம் கோடீஸ்வரகளில் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? ஒரு லட்சம் கோடி டாலர். உலக அளவிலான வளர்ச்சியை விட இந்தியாவில் இது 9 சதவீதம் அதிகம்.
உலக அளவில் மிகப் பெரிய கோடீஸ்வரர்கள், அமெரிக்கா, ஜப்பான்,
ஜெர்மனி ஆகிய நாடுகளில் அதிகம் உள்ளனர். 2017இல், உலக கோடீஸ்வரர்களின் பட்டியலில் இந்தியா 11வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
பங்குச் சந்தையில் ஏற்பட்ட 50% வளர்ச்சி, ரியல் எஸ்டேட் சொத்து மதிப்பு 4.8 % அதிகரித்தது , இந்தியாவின் வளர்ச்சி 6.7% ஆகியவை கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை அதிகரிக்க முக்கிய காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
Next Story