பாபா ராம்தேவ் தலைமையில் யோகா முகாம் - முதல்வர் வசுந்தரா ராஜே உட்பட 2 லட்சம் பேர் பங்கேற்பு

ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரமாண்ட யோகா நிகழ்ச்சியில், யோகா குரு பாபா ராம்தேவ் கலந்து கொண்டு, பல்வேறு ஆசனங்களை செய்து காட்டினார்.
பாபா ராம்தேவ் தலைமையில் யோகா முகாம் - முதல்வர் வசுந்தரா ராஜே உட்பட 2 லட்சம் பேர் பங்கேற்பு
x
பாபா ராம்தேவ் தலைமையில் யோகா முகாம்

உலகம் முழுவதும் சர்வதேச யோகா தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நடைபெறும் யோகா தின நிகழ்ச்சிகளில்  மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கலந்து கொண்டுள்ளனர். ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரமாண்ட யோகா நிகழ்ச்சியில்,  யோகா குரு பாபா ராம்தேவ் கலந்து கொண்டு, பல்வேறு ஆசனங்களை செய்து காட்டினார். இதில் அம்மாநில முதலமைச்சர் வசுந்தரா ராஜே, மேடையில் இருந்தபடி, ஆசனங்களை செய்தார். சுமார் 2 லட்சம் பேர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்