நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் மோடியின் உரை
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், நிதி ஆயோக் கவுன்சில் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது
குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில்
பல்வேறு மாநில முதலமைச்சர்கள், துணை நிலை ஆளுனர்கள், மத்திய அமைச்சர்கள் பங்கேற்றனர்.
இதில் விவசாயிகள் வருமானத்தை இரண்டு மடங்காக உயர்த்துதல், தேசிய ஊட்டச்சத்து திட்டம், இந்திரா தனுஷ் உள்ளிட்ட திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. கடந்த ஆண்டு செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்தும் இந்த கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது.
ஆயோக் கூட்டத்தில் பிரதமர் மோடியின் உரை:
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு, மத்திய அரசு தேவையான உதவிகளை செய்யும் என்று உறுதி அளித்தார்
டீம் இந்தியா என்ற பெயரில், ஜிஎஸ்டி போன்ற மிக கடுமையான முடிவுகள், சுலபமாக அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக பிரதமர்
தெரிவித்தார்
டிஜிட்டல் பரிவர்த்தனை, தூய்மை இந்தியா திட்டங்களில், கொள்கை முடிவுகளை மேற்கொள்ள, மாநில முதலமைச்சர்கள் முக்கிய பங்காற்றியதாக பிரதமர் குறிப்பிட்டார்.
இந்தியாவின் வளர்ச்சி விகிதத்தை இரண்டு இலக்க எண்ணாக மாற்றுவதுதான் மத்திய அரசின் தற்போதைய இலக்கு என்றும், அதற்கு முக்கியமான முடிவுகளை எடுக்க வேண்டும் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் 1.5 லட்சம் சுகாதார கூடங்கள் அமைக்கப்பட்டு வருவதாகவும், ஒவ்வொரு ஆண்டும்
5 லட்சம் ரூபாய் மதிப்பிலான மருத்துவ காப்பீடு 10 கோடி குடும்பங்களுக்கு வழங்கப்படும் என்று பிரதமர் உறுதி அளித்தார்
முத்ரா திட்டம், அனைவருக்கும் வங்கி கணக்கு போன்ற திட்டங்கள்
மக்களை நிதி கட்டமைப்பிற்குள் கொண்டு வர உதவியதாக பிரதமர் குறிப்பிட்டார்.
Next Story