போட்டித் தேர்வுகளில் மாணவர்களை சாதிக்க வைக்கும் அரசுப் பள்ளி

போட்டித் தேர்வுகளில் மாணவர்களை சாதிக்க வைக்கும் அரசுப் பள்ளி குறித்த ஒரு தொகுப்பு.
போட்டித் தேர்வுகளில் மாணவர்களை சாதிக்க வைக்கும் அரசுப் பள்ளி
x
போட்டித் தேர்வுகளில் மாணவர்களை சாதிக்க வைக்கும் அரசுப் பள்ளி

பெரம்பலூர் மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளை தமிழகத்தின் சிறந்த மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் இடம்பெறச் செய்யும் வகையில்,  சூப்பர் - 30 எனும் பெயரில் 2013 ஆம் ஆண்டு முதல் சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. பொது நுழைவுத்தேர்வுகளுக்கான பயிற்சிகள், அடுத்து என்ன படிக்கலாம் என்பது தொடர்பான ஆலோசனைகளும் வழங்கப்படுகின்றன.

இந்த சிறப்பு பயிற்சி வகுப்புகளுக்கான மாணவர்கள் நுழைவுத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். அரசுப் பள்ளிகளில் சிறப்பாக பணி புரிந்து வரும் அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களைக் கொண்டு சிறப்பு வகுப்புகளில் பாடங்கள் நடத்தப்படுகின்றன. மேலும், இந்த வகுப்புகளில் பயிலும் அனைத்து மாணவ, மாணவிகளும் அரசுப் பள்ளி விடுதிகளில் தங்கிப் பயில ஏற்பாடுகள் செய்யப்படுகிறது. தவிர தன்னம்பிக்கையூட்டும் மனவளப் பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன.

கடந்த 2013- 2014 முதல் 2016 -2017 வரையிலான கல்வி ஆண்டுகளில் சிறப்பு வகுப்புகளில் பயின்றவர்களில் மருத்துவப் படிப்பில் 8 பேர், செவிலியர் படிப்பில் 5 பேர், கால்நடை, வேளாண்மை துறையில் 14 பேர் என மொத்தம் 203 மாணவ, மாணவிகள் தாங்கள் விரும்பிய படிப்பைத் தேர்வு செய்து படித்து வருகின்றனர். பிளஸ் 2 பொதுத்தேர்வில் சூப்பர்- 30 வகுப்பில் பயின்ற 46 மாணவ, மாணவிகளில் 20 மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதையடுத்து, நடப்பு ஆண்டில் ஏராளமானோர் இந்த வகுப்புகளில் சேருவதற்கு ஆர்வம் காட்டினர்.

அனைத்து அரசுப் பள்ளிகளிலும் இதுபோன்ற திட்டங்களை கொண்டுவருவதன் மூலம், ஏழை, எளிய மாணவர்கள் தரமான கல்வி நிறுவனங்களில் தங்களது மேற்படிப்பை தொடர்ந்து, பயன் பெறுவார்கள் என்று நம்பலாம்.

Next Story

மேலும் செய்திகள்